ல்வள கங்கையில் நீரிழ் மூழ்கி உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்த 6 பிள்ளைகளின் விதவைத் தாய் காப்பாற்றப்பட்டுள்ளார்.
மாத்தறை சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரிவு பொலிஸ் அத்தியட்சகர் வருனி போகஹவத்தவினாலேயே இந்த தாய் காப்பாற்றப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தாய் மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே தனது கணவனை இழந்துள்ளார்.
இதனால் தன் குழந்தைகளை பராமரிக்க முடியாமையினாலேயே இந்த தாய் தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார்.
அத்துடன் தாய்க்கு ஐந்து மகள்கள் மற்றும் ஒரு மகன் இருப்பதாகவும் அவர்களின் வயது 6 முதல் 17 வரை இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தனது நான்கு இளைய மகள்களுடனேயே நீரில் மூழ்க இந்த பெண் முயற்சித்துள்ளார் என்றும், பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இப்பெண் காப்பாற்றப்பட்டுள்ளார் என கூறப்படுகின்றது.
இருப்பினும், பொலிஸ் அதிகாரிகளால் பெண்ணின் மனதை மாற்ற முடியவில்லை எனவே, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்.