உயிர்கொல்லி நோயால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுவன்

182

ரத்தத்தில் ஏற்பட்டுள்ள உயிர் கொல்லி நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவன் தனது கனவான பொலிஸ் பணி குறித்து ஆர்வமுடன் கற்று வருகிறான்.

பிரித்தானியாவின் மான்செஸ்டரை சேர்ந்தவர் Ally, இவர் மகன் Charlie (7) ரத்தத்தில் ஏற்பட்டுள்ள விசித்திர உயிர் கொல்லி நோயால் பாதிக்கப்பட்டுள்ளான்.

Charlie-க்கு பொலிஸ் அதிகாரியாக வேண்டும் என்பது பெரும் கனவாகும். இதையறிந்த தனியார் தொண்டு நிறுவனம் சிறுவனின் ஆசை குறித்து பொலிசாரிடம் பரிந்துரை செய்ய Charlie-ன் கனவு நிறைவேறியுள்ளது.

தற்போது Charlie-க்கு பொலிஸ் உடை வழங்கப்பட்டுள்ள நிலையில், பக்கிங்ஹாம் அரண்மனை காவலிலும் Charlie பொலிசார் உதவியுடன் ஈடுபடுகிறான்.

பொலிசார் பயன்படுத்தும் ஹெலிகொப்டர், கார்கள் அனைத்திலும் உட்கார Charlie-க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ் பணி குறித்தும் அவனுக்கு அதிகாரிகள் சொல்லி தருகிறார்கள்.

Charlie கூறுகையில், நான் வேகமாக ஓடுவேன் மற்றும் திருடர்களை பிடிக்க நிறைய தந்திரங்களை வைத்துள்ளேன் என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளான்.

Charlie-ன் தாய் Ally கூறுகையில், வளர்ந்ததும் பொலிஸ் அதிகாரி ஆக வேண்டும் என்பதே அவன் கனவு.

வீட்டில் பொலிஸ் பொம்மை மற்றும் கணினியில் பொலிஸ் விளையாட்டு மட்டும் தான் விளையாடுவான் என கூறியுள்ளார்.

SHARE