உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர் மியான்மாரில் கைது

310

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்ஒருவர் மியான்மாரில் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.

விசா புதுப்பித்தலுக்காக குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு சென்றபோதே குறித்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் 39 வயதுடைய அப்துல் சலாம் இர்ஷாத் மொஹமட் என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபருக்கு தற்கொலை குண்டு தாக்குதலுடன் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸ் விசேட பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

SHARE