உரிய காலத்தில் மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் – பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்

166

தேர்தல் முறைமையை காரணம் காட்டி தேர்தலை இழுத்தடிப்பது ஜனநாயக கட்டமைப்பின் அடிப்படையை மீறும் செயலாகவே பார்க்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மாகாண சபைத் தேர்தலை புதிய முறையிலோ, பழைய முறையிலோ உரிய காலத்தில் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் மூன்று மாகாணசபைகளின் பதவிக்காலங்கள் முடிவடைந்துள்ளன. எதிர்வரும் ஒக்டோபரில் மேலும் மூன்று சபைகளின் பதவிக்காலம் முடிவடையவுள்ளன. இவ்வாறான நிலையில் மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டு ஐந்து மாதங்கள் கடந்துள்ளபோதும் அது சபையில் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லையென்றும் நேற்று(06) பாராளுமன்ற விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

SHARE