மனிதர்களின் அழகை முன்னிறுத்தி காட்டுவதில் தலைமுடி எப்போதும் முக்கிய பங்கு வகிக்கிறது.
முன்பு போல இல்லாமல் தற்போது இளம் வயதிலேயே பலருக்கு தலைமுடியானது நரைக்க தொடங்கி விடுகிறது.
இதற்கு மன அழுத்தம், உணவு முறை, தூக்கமின்மை என பல காரணங்கள் இருக்கலாம்.
நரைமுடியை கருப்பாக மாற்ற ஹேர்டையை சிலர் நாடுவார்கள், இது பல சமயம் கேடு விளைவிக்கும்.
சரி, இயற்கையான முறையில் உருளைக்கிழங்கை வைத்து தலைமுடியை கருமை நிறமாக மாற்றும் வழியை காண்போம்.
தேவையான பொருட்கள்
- 6 உருளை கிழங்குகளிலிருந்து உரிக்கப்பட்ட தோல்.
- வடிகட்டி
- சுத்தமான கிண்ணம்
- எண்ணெய்
செய்முறை
- முதலில் உருளைக்கிழங்கு தோல்களை தண்ணீர் போட வேண்டும்.
- பிறகு 20 நிமிடத்துக்கு அதை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
- பிறகு வடிகட்டி மூலம் அந்த உருளைக்கிழங்கு சாற்றை வேறு கிண்ணத்தில் வடிகட்ட வேண்டும்.
- அதில் Lavender அல்லது Rosemary எண்ணெய் சில சொட்டுகள் கலக்கலாம்.
இப்போது மருந்து ரெடி!
இதை தலையில் நன்றாக தேய்க்க வேண்டும். 3 நிமிடங்களுக்கு அப்படியே வைத்து பின்னர் தண்ணீரில் கழுவ வேண்டும்.
பின்னர் தலையை காய வைத்து கொள்ளலாம்.
வாரத்துக்கு 3 முறை வரை இப்படி செய்தால் விரைவில் தலைமுடி நிறத்தில் நல்ல மாற்றம் ஏற்ப்படும்.