சுவிட்சர்லாந்தில் உறவினர் என கூறி முதியவர்களிடம் பணம் பறிக்கும் கொள்ளை கும்பலிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்கும்படி பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தின் லாசன்னே மாகாணத்தில் 87 முதியவரிடம் நபர் ஒருவர் தூரத்து உறவினர் என்று தம்மை அறிமுகம் செய்துள்ளார். தங்களது குடும்பத்தில் ஒருவர் போல முன்னர் நடந்த சம்பவங்களையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
பின்னர் தமது பணப் பிரச்னை குறித்து கவலை தெரிவித்த அவர், அந்த மூதாட்டியின் மனதை கரைக்கு வகையில் பேசியுள்ளார். இதனையடுத்து அந்த மூதாட்டி தமது சேமிப்பில் இருந்த 70,000 பிராங்க் (1,03,65,604 இலங்கை ரூபாய்) மொத்தமும் அந்த நபருக்கு அளித்து உதவியுள்ளார்.
இதனிடையே தமது குடும்பத்தினரிடம் விசாரித்ததில் அவருக்கு அப்படி ஒரு உறவினர் இல்லை என்பதும் குறிப்பிட்ட நபர் இதுபோன்று பலரிடமும் பணம் பறித்துள்ளது தெரிய வந்தது.
கடந்த திங்கள் அன்று Vaudois பகுதியில் 67 வயது மூதாட்டியிடம் நபர் ஒருவர் நிர்பந்தித்து 50,000 பிராங்க் மொத்தமாக பறித்து சென்றுள்ளார்.
இந்த விவகாரம் தற்போது சுவிட்சர்லாந்தின் பல்வேறு மாகாணங்களில் தொடர்கதையாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து மாகாண பொலிஸார் குறித்த சம்பவங்கள் எவருக்கேனும் நேர்ந்தால் உடனடியாக பொலிஸாரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.
முதியவர்களை மட்டுமே குறி வைத்து இந்த சம்பவங்கள் நடப்பதால் அவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.