
திண்டுக்கல் நிலக்கோட்டை கொக்குபட்டியைச் சேர்ந்த பிளஸ் 2 படிக்கும் மாணவியே ஆசிட்வீச்சுக்கு ஆளாகியுள்ளார்.
இரவில் மின்சாரம் தடை பட்டதால் மாணவி பெற்றோருடன் சென்று உறவினர் வீட்டில் தூங்கியுள்ளார்.
குறித்த மாணவி நள்ளிரவில் திடீரென அலறி பயங்கர சத்தம் எழுப்பினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் எழுந்த மாணவியைப் பார்த்த போது, அவரது உடல் பாகங்கள் கருகிய நிலையில் இருந்தன.
இதையடுத்து பெற்றோர் உடனடியாக மாணவியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மாணவி மீதான ஆசிட் வீச்சிற்கான காரணம் தெரியவில்லை. யார் வீசினார்கள், என்ன காரணம் என்பது குறித்து காவல்த்துறையினர் தீவிர விசாரனண நடத்தி வருகின்றனர்.