இந்தியாவில் ஆரம்பமாகவுள்ள உலககிண்ண கிரிக்கெட்போட்டியின் அரையிறுதியில் மோதவுள்ள அணிகள் எவை என்பதை இலங்கையின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் கணித்துள்ளார்.
இதன்படி அரையிறுதி போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் ஆகிய அடங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
பெயர்போன அணிகள்
கிரிக்கெட் திறமை மற்றும் வெற்றியின் வரலாறு ஆகியவற்றுக்கு பெயர்போன இந்த அணிகள், உலக கிண்ண பேட்டியில் வலுவான போட்டியாளர்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முன்னணி அணிகள் அரையிறுதியில் இடம்பிடிப்பதால், கிரிக்கெட் ரசிகர்கள் பரபரப்பான போட்டியை காண ஆவலுடன் உள்ளனர்.