உலகக்கிண்ண கிரிக்கெட் – பாகிஸ்தான் வீரர்கள் குழாம் அறிவிப்பு

223

12 ஆவது உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள பாகிஸ்தான் அணி வீரர்கள் 15 பேர் கொண்ட குழாமை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இதேவேளை, உலகக் கிண்ண தொடரில் நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, இந்தியா, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, ஆப்கானிஸ்தான், மேற்கிந்தியத்தீவுகள் ஆகிய 10 நாடுகள் இம்முறை உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கின்றன.

ஐ.சி.சி.யின் 12 ஆவது உலகக் கிண்ண 50 ஓவர் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 14 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், இம்மாதம் 23 ஆம் திகதிக்கு முன்னர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான அணிகளை அறிவிக்க வேண்டும்.

இதேவேளை, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, இந்தியா, பங்களாதேஷ் இலங்கை ஆகிய அணிகள் தமது 15 பேரடங்கிய வீரர்களின் பெயர் விபரங்களை வெளியிட்டுள்ள நிலையில், தற்போது, போட்டியை நடத்தும் இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் தங்களது வீரர்களின் பெயர் விபரங்களை வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் அறிவிக்கப்பட்டுள்ள 15 பேரடங்கிய வீரர்களின் விபரம் வருமாறு,

பாகிஸ்தான் உத்தேச அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிருக்கு இடம் அளிக்கப்படவில்லை. ஆனால் அவர் மாற்று ஆட்டக்காரர் பட்டியலில் உள்ளார். அத்துடன் இங்கிலாந்து தொடருக்கான ஒரு நாள், 20 ஓவர் அணியில் இடம் பிடித்துள்ளார். இங்கிலாந்து தொடரில் அவர் செயல்படுவதை பொறுத்து இறுதி அணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளது.

பாகிஸ்தான் அணிக்கு சப்ராஸ் அகமது தலைமை தாங்குகின்றார். அவருடன் இமால் உல்–ஹக், அபித் அலி, ஜூனைட் கான், பாபர் அசாம், முகமது ஹபீஸ், பகீம் அஷ்ரப், முகமது ஹஸ்னைன், பஹார் ஜமான், ‌ஷதப்கான், ஹாரிஸ் சோகைல், ‌ஷகீன் ஷா அப்ரிடி, ஹசன் அலி, சோயிப் மாலிக், இமாத் வாசிம். மாற்று ஆட்டக்காரர்களாக வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர், துடுப்பாட்ட வீரர் ஆசிப் அலி ஆகியோர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

SHARE