உலகக்கோப்பை மீது கால் வைப்பதா? நான் காயப்பட்டேன் – முகமது ஷமி

131

 

அவுஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் உலகக்கோப்பை மீது கால் வைத்தது மகிழ்ச்சி அளிக்கவில்லை என இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷமி கூறியுள்ளார்.

6வது முறையாக சாம்பியன்
இந்திய அணிக்கு எதிரான உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 6வது முறையாக சாம்பியன் ஆனது.

அதனைத் தொடர்ந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அவுஸ்திரேலியவீரர்களில் மிட்செல் மார்ஷ் செய்த விடயம் விமர்சனங்களை பெற்றது.

சோஃபா நாற்காலியில் அமர்ந்திருந்த அவர் உலகக்கோப்பை மேல் இரு கால்களையும் வைத்தபடி போஸ் கொடுத்த புகைப்படம் வெளியானது தான் அதற்கு காரணம்.

முகமது ஷமி வருத்தம்
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி உலகக்கோப்பை மீது கால் வைத்தது குறித்து கருத்து தெரிவித்தார்.

அவர் கூறுகையில், ‘என்னை காயப்படுத்தியது. உலகில் உள்ள அனைத்து அணிகளும் போராடும் கோப்பை, உங்கள் தலைக்கு மேல் தூக்கி வைக்க விரும்பும் கோப்பை, அந்த கோப்பையின் மீது கால் வைத்தது என்னை மகிழ்விக்கவில்லை’ என தெரிவித்துள்ளார்.

 

SHARE