உலகக் கிண்ணப் போட்டிகளிலிருந்து அவுஸ்திரேலியா விலகல்

368
19வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கிண்ணப் போட்டிகளிலிருந்து அவுஸ்திரேலியா விலகுவதாக அறிவித்துள்ளது.19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் வங்கதேசத்தில் வருகிற 27ம் திகதி தொடங்குகிறது.

இந்நிலையில் இப்போட்டியிலிருந்து விலகுவதாக அவுஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இதற்கு முன்பாக கடந்தாண்டு அக்டோபர் மாதம் அவுஸ்திரேலிய அணி, வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுவதாக இருந்தது.

ஆனால் தீவிரவாதிகளால் அவுஸ்திரேலிய அணி வீரர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரித்த காரணத்தால், அந்த தொடர் ரத்தானது.

இந்நிலையில் இதேயே காரணம் காட்டி தற்போது உலகக் கிண்ணத் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.

Cricket-Australia

SHARE