உலகக் கோப்பை 2023: இந்திய கிரிக்கெட் வாரியம் எடுத்த அதிரடி முடிவு!

174

 

உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியம் எடுத்த முடிவு
அதன்படி டெல்லி மற்றும் மும்பையில் நடைபெறும் போட்டிகளின் போது பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்த நகரங்களில் காற்று மாசு அபாயகரமான அளவில் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், டெல்லி மற்றும் மும்பையை மையமாக கொண்டு நடைபெறும் உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் கீழ் வரும் எந்த ஒரு போட்டியிலும் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE