அமெரிக்காவின் 45ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் கடந்த வெள்ளி பதவி ஏற்றுக் கொண்டார்.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக இவர் பதவி ஏற்றுக் கொண்டது அனைத்து உலக நாடுகளினதும் விமர்சனமான விடயமாகக் கூட இருந்து வருகின்றது.
அவ்வகையில் இலங்கையிலும் கூட இவருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் இடம் பெற்றிருந்தன. உலகளாவிய ரீதியில் ட்ரம்ப் மற்றும் அவருடைய மனைவி மீது பல்வேறு வகையான விமர்சனங்கள் எழுப்பப்பட்டாலும் அவர் மிகவும் மகிழ்வுடன் பதவியை ஏற்றுக்கொண்டார்.
இதே நேரம் குறித்த பதவி ஏற்பு நிகழ்வின் போது ட்ரம்ப்பும் அவருடைய மனைவியுடம் நடனமாடி பார்வையாளர்களை மட்டுமல்லாது உலக மக்களையும் கூட வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
அதே சமயம் அவர் குடும்ப உறுப்பினர்களும் ஒன்றாக ஒரே மேடையில் நடனமாடி தமது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியது வைரலாக பரவி வருகின்றது.
இவர்களது இந்தச் செயற்பாடு ஓர் தலைவன் விமர்சனங்களை பெரிது படுத்தாமல் செயற்பட்டு வருவதற்கு சிறந்த எடுத்துக் காட்டு எனவும் கூறப்படுகின்றது.
இதேவேளை இலங்கை அதிபரும் கூட பல வகையான விமர்சனங்களைக் கடந்து பொது மக்களிடையே மகிழ்ச்சியாக செயற்பட்டு வருகின்றார். எளிமையான ஓர் ஜனாதிபதி எனவும் மைத்திரியை சர்வதேச தரப்பும் விமர்சித்து வருகின்றார்.
அண்மையில் பாடசாலையில் ஒன்றில் வைத்து மைத்திரி கிடார் வாசித்து பாடல்களையும் பாடியிருந்தமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.
இவர்களின் இத்தகைய செயற்பாடுகள் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் செயற்பாடுகளுக்கு ஒத்ததாகவே காணப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. அந்த வகையில் ஒபாமா, மைத்திரி வரிசையில் ட்ரம்பும் இணைந்து விட்டதாக கூறப்படுகின்றது.
எவ்வாறெனினும் விமர்சனங்களை தாண்டி ஒரு தலைவன் செயற்படும் போது முன்னேற்றகரமான செயற்பாடுகள் இடம்பெறும் என்பதே உண்மையாகும்