அளவுக்கு அதிகமாக பணம் வைத்திருப்பவர்கள் அதை என்ன செய்வது என்று தெரியாமல் திணறுவார்கள்.
இவர்களுக்கு கத்தி விஜய் பாணியில் “நமது தேவைக்கு அதிகமாக சேர்க்கும் ஒவ்வொரு ரூபாவும் மற்றவர்களுடையது” என்று அட்வைஸ் சொன்னாலும் கேட்கமாட்டார்கள். சரி நாம் விடயத்திற்கு வருவோம்.
இந்தியாவின் மகாராஸ்டிரா மாநிலத்தில் உள்ள நாஷிக் பகுதியில் வசித்து வரும் தொழிலதிபரும், அரசியல்வாதியுமான 47 வயது நிரம்பிய பங்கஜ் பராக் என்பவர் தங்கத்தால் ஆன சேர்ட் அணிந்து உலக சாதனை படைத்துள்ளார்.
இந்த ஆடையின் எடை 4.10 கிலோ கிராம்களாக இருப்பதுடன், பெறுமதி இந்திய மதிப்பில் 1.30 கோடி ரூபாய்களாக காணப்படுகின்றது.
இதேவேளை இதற்கு முன்னர் 2014ம் ஆண்டு இந்திய மதிப்பில் 98,35,099 ரூபா பெறுமதியான தங்க ஆடை அணிந்து உலக சாதனை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.