உலகிலேயே குண்டான சிறுவனின் தற்போதைய நிலை

181

இந்தோனேஷியாவின் West Java மாகாணத்தை சேர்ந்த ஆர்யா பெர்மான் உலகின் குண்டான சிறுவன் என கூறப்பட்ட நிலையில் தற்போது உடல் எடையை குறைத்துள்ளான்.

ஆர்யா பெர்மான் 10வது வயதில் 191 கிலோ எடையுடன் இருந்ததால், அவனால் தனது படுக்கையில் இருந்து கூட நகர்ந்து செல்ல முடியாமல் அவதிக்கு ஆளாகினான்.

இந்நிலையில், அறுசை சிகிச்சை செய்யப்பட்டு 83 கிலாவை எடை குறைக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பின்னர், இவனது உணவுமுறையில் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும், அதிகமாக பழ வகைகளுக்கே முக்கியத்துவம் வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உடல் எடை குறைந்துவிட்டதால் ஆர்யா தற்போது பள்ளிக்கு செல்ல ஆரம்பித்துவிட்டான். தினமும் 2 கிலோ மீற்றர் நடந்து பள்ளிக்கு செல்கிறான். மேலும் நண்பர்களுடன் சேர்ந்து கால்பந்து மற்றும் டென்னிஸ் விளையாடி வருகிறான் என அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

SHARE