உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்கள் பட்டியல் வெளியானது எந்த நாடு எந்த இடத்தில்?

153

உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது.

விசா தேவையில்லாத பாஸ்போர்ட்டுகளின் அடிப்படையில் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருப்பது சிங்கப்பூர் மற்றும் ஜேர்மனி நாடுகளாகும். 165 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கும் வகையில் அந்த நாடுகளின் பாஸ்போர்ட் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கின்றன.

இதில் ஆப்கானிஸ்தான் 91வது இடத்திலும், பாகிஸ்தான் மாற்றும் ஈராக் நாடுகள் 90வது இடத்திலும் உள்ளன.

சிரியா 88வது இடத்திலும், சோமாலியா 87வது இடத்திலும் உள்ளது. இலங்கை 81-வது இடத்திலும் இந்தியா 66-வது இடத்திலும் உள்ளன.

ஒருவர் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம், அல்லது ஒருவர் எந்தெந்த நாடுகளுக்கு செல்ல விசா தேவைப்படுகிறது என்பதைப் பொறுத்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

விசா ஆன் அரைவல், எலெக்ரானிக் ட்ராவல் அத்தாரிட்டி ஆகியவற்றின் அடிப்படையிலும் இந்த புள்ளிகள் வழங்கப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.

சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டுகளின் பட்டியல்:

  1. சிங்கப்பூர்
  2. ஜேர்மனி
  3. டென்மார்க்
  4. ஸ்வீடன்
  5. ஃபின்லாந்து
  6. லக்சம்பர்க்
  7. பிரான்ஸ்
  8. இத்தாலி
  9. நெதர்லாந்து
  10. ஸ்பெயின்
  11. நார்வே
  12. தென் கொரியா
  13. அமெரிக்கா
SHARE