உலகின் மிகப்பெரிய உல்லாச நகரம் உருவாகிறது

174

உலகின் மிக பெரிய முன் மாதிரியான பொழுது போக்கு நகரை அமைக்கவுள்ள திட்டத்தை சவுதி அரேபியா அரசு வெளியிட்டுள்ளது.

சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தின் எல்லையில் தான் உல்லாச நகரம் அமைக்கபடவுள்ளது.

334 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டு உருவாகவிருக்கும் பொழுதுபோக்கு நகரம் கலாசாரம், விளையாட்டு போன்ற செயல்பாடுகளுக்கான ஓர் இடமாக அமையும் என சவுதி துணை இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார்.

இந்த உல்லாச நகரத்தின் கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கி 2022-ஆம் ஆண்டில் நிறைவடையும் எனவும் அறிவிக்கபட்டுள்ளது.

இந்த நகரம் பார்வையாளர்களை மட்டும் ஈர்க்காமல், தலைநகரில் வசிப்பவர்களுக்கு ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை கொடுக்கும் என தெரிகிறது.

எண்ணெய் வருமானத்தை மட்டுமே சார்ந்திருப்பதை குறைப்பதற்கு, வேலை வாய்ப்புகளை உருவாக்கும் இலக்குகளை கொண்ட விஷன் 2030 ஆகியவைகளுக்கு ஒரு பகுதியாக சவுதி அரசு இதை நிறைவேற்றவுள்ளது.

SHARE