உலகின் மிக மோசமான விமான நிலையங்களின் பட்டியலில் 4 எண்ணம் பிரித்தானியாவில் அமைந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
தனியார் நிறுவனம் ஒன்று மேற்கொண்ட ஆய்வின்படி உலகின் மிக மோசமான விமான நிலையங்களின் பட்டியலில் பிரித்தானியாவின் Gatwick, Manchester, Stanstead மற்றும் Edinburgh ஆகியவை இடம்பெற்றுள்ளன.
விமான பயணிகளுக்கு மிக மோசமான அனுபவங்களை வழங்கும் விமான நிலையங்கள் குறித்த ஆய்வினை தனியார் நிறுவனம் ஒன்று மேற்கொண்டுள்ளது.
இதில், முதலிடத்தில் இந்தியாவின் டெல்லி விமான நிலையம் உள்ளது. இரண்டாமிடத்தில் பாங்காக் சுவர்ணபூமி விமான நிலையம் உள்ளது.
3-வது இடத்தில் ஐக்கிய அமீரகத்தின் துபாய் விமான நிலையம் உள்ளது, 4-வது இடத்தில் இந்தியாவின் மும்பை விமான் நிலையமும் 5-வது இடத்தில் பிரித்தானியாவில் உள்ள Edinburgh விமான நிலையமும் உள்ளது.
மேலும் விமான சேவை நிறுவங்கள் குறித்தும் இந்த நிறுவனமானது ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 87 விமான சேவை நிறுவனங்களை பட்டியலிட்டதில் விர்ஜின் விமான சேவை நிறுவனம் 8-வது இடத்தில் உள்ளது. அதே போன்று Flybe விமான சேவை நிறுவனம் 22-வது இடத்தில் உள்ளது.
தரவரிசைப் பட்டியலில் சிங்கப்பூர், கத்தார் மற்றும் Etihad விமான சேவை நிறுவனங்கள் முதன்மை பெற்றுள்ளன.