உலகிலேயே அழகான திருநங்கை 

199

உலகிலேயே அழகான திருநங்கை என்ற பட்டத்தை தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்வதேச அளவில் அழகான திருநங்கைகளை தெரிவு செய்யும் நிகழ்ச்சி நேற்று தாய்லாந்து நாட்டில் கோலாகலாமாக நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் அமெரிக்கா, பிரேசில், மெக்ஸிகோ, ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த திருநங்கைகள் பங்கேற்றுள்ளனர்.

பல்வேறு சுற்றுகளுக்கு பிறகு தாய்லாந்து நாட்டை சேர்ந்த Jiratchaya Sirimongkolnawin என்பவர் ‘உலகிலேயே அழகான திருநங்கை(Miss International Transgender Queen) என்ற பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

இதே நிகழ்ச்சியில் பிரேசில் நாட்டை சேர்ந்த Nathalie Oliveitra என்பவருக்கு இரண்டாவது இடமும், வெனிசுலா நாட்டை சேர்ந்த Andrea Collazo என்பவருக்கு மூன்றாவது இடமும் கிடைத்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் தன்னுடைய அழகான புகைப்படங்களை வெளியிட்டு பிரபலமானதை தொடர்ந்து இப்போட்டியில் Jiratchaya Sirimongkolnawin பங்கேற்று முதல் இடத்தை பிடித்துள்ளார்.

தாய்லாந்து நாட்டை சேர்ந்த இவர் அடிப்படையில் பல் மருத்துவராக பணிபுரிந்து வருவதுடன் மொடல் துறையிலும் ஈடுப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

SHARE