உலகிலேயே குழந்தைகள் இருப்பதற்கு ஆபத்தான இடம் எது தெரியுமா? யுனிசெஃப் தகவல்

97

 

உலகிலேயே குழந்தைகள் இருப்பதற்கு மிகவும் ஆபத்தான இடம் காசா பகுதி என யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

காசா பகுதிக்கு யுனிசெஃப் துணை நிர்வாக இயக்குனர் டெட் சாய்பான் 3 நாட்கள் விஜயம் மேற்கொண்டிருந்தார்.

அப்போது, இதுவரை தான் கண்டிராத சில பயங்கரமான நிலைமைகளை அனுபவித்த குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை” சந்தித்ததாக டெட் சாய்பான் தெரிவித்திருந்தார்.

மேலும், குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்கள் நாளாந்தம் கொல்லப்படுவதையும் காயப்படுத்துவதையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஒரு மனிதாபிமான போர்நிறுத்தத்திற்காக நாங்கள் இனி காத்திருக்க முடியாது, அவசரமாக தேவையான உதவிகளை வழங்கவும் எனவும் தெரிவித்துள்ளார்.

SHARE