உலகிலேயே வாழ்க்கை நடத்துவதற்கு அதிக செலவு பிடிக்கும் நகரங்களின் பட்டியலில் சீனாவின் ஹாங்காங் முதலிடம் பிடித்துள்ளது.அமெரிக்காவை சேர்ந்த Mercer எனும் நிறுவனம் 5 கண்டங்களை சேர்ந்த 209 நகரங்களில் ஆய்வு நடத்தியது. இதில் வீடு, போக்குவரத்து, உணவு, ஆடைகள் உட்பட 200க்கும் மேற்பட்ட விடயங்களுக்கு ஆகும் செலவுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன.இதில் செலவு மிகுந்த நகரமாக சீனாவின் ஹாங்காங் தெரிவாகியுள்ளது.
அமெரிக்காவை பொறுத்தவரையில் நியூயார்க் 13வது இடத்திலும், சான் பிரான்சிஸ்கோ 28வது இடத்திலும், லாஸ் ஏஞ்சல்ஸ் 35வது இடத்திலும் உள்ளது. ஐரோப்பிய நகரங்களில் பாரிஸ் 34வது இடத்திலும், ரோம் 46வது இடத்திலும் உள்ளன. மத்திய கிழக்கு நாடுகள் இந்த பட்டியலில் சரிவை சந்தித்துள்ளன, காரணம் வீட்டு வாடகை குறைக்கப்பட்டதே, முதல் நகரமே 16வது இடத்தில் டெல் அவிவ் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செலவு மிகுந்த நகரங்களின் பட்டியல்
Hong Kong (China)
Tokyo (Japan)
Zurich (Switzerland)
Singapore
Seoul (South Korea)
Luanda (Angola)
Shanghai (China)
N’Djamena (Chad)
Beijing (China)
Bern (Switzerland)
Geneva (Switzerland)
Shenzhen (China)
New York City
Copenhagen (Denmark)
Guangzhou (China)
Tel Aviv (Israel)
Moscow (Russia)
Libreville (Gabon)
Brazzaville (Republic of the Congo), London (UK)