உலகிலேயே மிக அழகான பெண் இவர் தானாம்

227

உலகில் மிக அழகான பெண்ணாக பிரபல பாடகி பியான்ஸே நோலஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரை சேர்ந்த பஸ்நெட் என்னும் சமூக வலைத்தளம் உலகிலேயே மிக அழகான பெண் யார் என்பதற்கான வாக்கெடுப்பினை நடத்தியது.

இந்த வாக்கெடுப்பின் முடிவில் 30 அழகான பெண்களின் பெயர் பட்டியலானது வெளியிடப்பட்டுள்ளது.

இதில் அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகி பியான்ஸே நோலஸ் முதலிடம் பெற்றுள்ளார்.

இரண்டாவது இடத்தில் இந்திய நடிகை பிரியங்கா சோப்ராவும், 3ம் இடத்தில் விக்டோரியா சீக்ரெட் ஏஞ்சனான டெய்லர் ஹில்-ம், 4ம் இடத்தில் எம்மா வாட்சனும், 5-ம் இடத்தில் டகோடா ஜான்சனும், 6-ம் இடத்தில் ஹிலாரி கிளிண்டனும் உள்ளனர்.

பிரபல ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலினா ஜீலி 7-ம் இடத்திலும் , சமீபத்தில் ஆஸ்கர் விருதினை வென்ற நடிகை எம்மா ஸ்டோன் 12-ம் இடத்திலும் உள்ளனர்.

SHARE