உலகிலேயே முதல் முறையாக ரிமோட் மூலம் இயங்கக் கூடிய நுண்ணோக்கி கண்டுபிடிப்பு

275

உலகில் முதன் முறையாக Remote control மூலமாக இயங்கக் கூடிய நுண்ணோக்கியை சென்னை ஐ.ஐ.டி உருவாக்கியுள்ளது.

சென்னை ஐ.ஐ.டி Remote control மூலமாக இயங்கக் கூடிய நுண்ணோக்கியை ரூ.40 கோடி செலவில் உருவாக்கியுள்ளது. சென்னை ஐ.ஐ.டி அமைப்பு நாட்டிலுள்ள எட்டு முன்னணி ஆய்வு மையங்கள் இணைந்து இதனை உருவாக்கியுள்ளன.

இதன் மூலம் அணுக்களை விரிவாக ஆய்வு செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. இதுபோன்ற நுண்ணோக்கிகள் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளன. ஆனால், Remote மூலம் இயங்கக் கூடிய நுண்ணோக்கி உருவாக்கப்படுவது உலகிலேயே இதுதான் முதல் முறையாகும்.

இதுகுறித்து இந்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை செயலர் கூறுகையில், ‘இந்த தொழில்நுட்பத்தை பராமரிப்பது, பகிர்ந்து பயன்படுத்துவது குறித்து இந்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை விரைவில் அறிவிக்கும்’ என தெரிவித்துள்ளார்.

SHARE