உலகில் அதிகமாக இணைய பயன்பாடு உள்ள நாடுகளில் 86வது இடத்தில் இலங்கை

271

computer_use_002-w540

உலகளாவிய ரீதியில் இணையத்தை பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளது.

உலக நாடுகளில் இணையம் பயன்படுத்துபவர்கள் தொடர்பில் வெளியான புதிய ஆய்வினை ஒப்பிடும் போதும், அதிக இணைய பயன்பாட்டாளர்களை கொண்ட நாடுகளில் 86வது இடம் இலங்கைக்கு கிடைத்துள்ளது.

196 நாடுகளிலேயே இலங்கைக்கு 86வது இடம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நாட்டில் இணையத்துடன் இணைந்துள்ள நபர்களின் எண்ணிக்கை 19 வீதமாகும். கையடக்க தொலைப்பேசிகளில் இணையத்தை பயன்படுத்துபவர்களும் இந்த பட்டியலுக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

உலகின் நிலையான வீட்டு இணைய இணைப்புக்கள் உள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 115வது இடம் கிடைத்துள்ளது.

இலங்கையிலுள்ள மக்கள் தொகையில் நூற்றுக்கு 3.1 வீதமானோர் நிலையான இணைய இணைப்பினை கொண்டுள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

தொலைப்பேசி மூலம் இணையத்தளம் பயன்படுத்தும் எண்ணிக்கை 16 வீதமாகும். இதில் இலங்கைக்கு 135வது இடம் கிடைத்துள்ளது.

உலகின் அதிகமாக இணையம் பயன்படுத்தும் நாடுகளில் முதல் இடத்தை தென் கொரியா பிடித்துள்ளது. அங்கு 98 வீதம் இணைய பயன்பாடு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

SHARE