உலகில் எந்த நாட்டவர் அதிக அளவு மது அருந்துகின்றனர் தெரியுமா?

175

பெலாரஸ் நாட்டவர் ஒருவர் சராசரியாக ஆண்டுக்கு சுமார் 17.5 லிற்றர் மது அருந்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகில் சில நாடுகளில் மது அருந்துதல் என்பது சட்ட விரோதமாக பார்க்கப்படுகிறது. ஆனால் பல நாடுகளில் அது அன்றாட நிகழ்வாக கருதப்படுகிறது.

உலக சுகாதார அமைப்பின் ஆய்விகளின்படி மதுவால் ஆண்டுக்கு சுமார் 2.5 மில்லியன் பேர் இறப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.

அதிகம் மது அருந்தும் நாட்டவர்கள் பட்டியலில் உலக அளவில் முதல் 10 இடங்களில் பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளே இடம்பிடித்துள்ளன.

உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள பட்டியலின்படி பெலாரஸ் நாட்டவர்கள் சராசரியாக ஆண்டுக்கு சுமார் 17.5 லிற்றர் மது அருந்துவதாக தெரியவந்துள்ளது.

மட்டுமின்றி 34.7% மரணங்கள் இங்கு மது தொடர்பான காரணங்களால் நிகழ்கிறது.

ரஷ்ய நாட்டவர்கள் 15.1 லிற்றர் மது அருந்துகின்றனர்.

பிரான்ஸ் நாட்டவர்கள் ஆண்டுக்கு 12.2 லிற்றர் மது அருந்துகின்றனர். பிரித்தானியர்கள் 11.6 லிற்றர் அளவுக்கு மது அருந்துகின்றனர். சீனா(6.7), இந்தியா(4.3), துருக்கி(2), இந்தோனேசியா(0.6).

எந்த நாட்டவர்கள் அதிகம் மது அருந்துகின்றனர்:

  • பெலாரஸ் – 17.5
  • ரஷ்யா – 15.1
  • பிரான்ஸ், அவுஸ்திரேலியா – 12.2
  • அயர்லாந்து – 11.9
  • ஜேர்மனி – 11.8
  • பிரித்தானியா – 11.6
  • கனடா – 10.2
  • நைஜீரியா – 10.1
  • அமெரிக்கா – 9.2
  • பிரேசில் – 8.7
  • ஜப்பான் – 7.2
  • இத்தாலி, சீனா – 6.7
  • இந்தியா – 4.3
  • துருக்கி – 2
  • சவுதி அரேபியா – 0.2
SHARE