உலகை கதிகலக்கிய வைரசை முறியடித்த பிரித்தானியா ஹீரோ

193

பிரித்தானியாவை சேர்ந்த இளம் கணினி நிபுணர் அமெரிக்கா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உலக அளவில் கதிகலங்க வைத்த வான்னா கிரை என்ற கணினி வைரசை முறியடித்த ஹீரோ என பாராட்டப்பட்ட பிரித்தானியாவை சேர்ந்த இளம் கணினித் துறை பாதுகாப்பு ஆய்வாளரும், நிபுணருமான மார்க்கஸ் ஹிட்சின்ஸ் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

லாஸ் வேகசில் கணினி ஊடுருவல்களைத் தடுப்பது மீதான முக்கிய சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்கு வந்திருந்த ஹிட்சின்ஸ், பின்னர் தாயகம் புறப்படவிருந்த போது அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹிட்சின்சும் அவருடைய மற்றொரு நண்பரும் சேர்ந்து இணையம் வழி வங்கிகளில் பணப் பட்டுவாடா நடப்பது குறித்த சில முக்கிய தகவல்களைக் திருடுவதற்கான மென்பொருளைத் தயார் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைதாகி இருப்பதாக தெரியவந்துள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு யூலையில் ஹிட்சின்ஸ் இந்தக் குற்றத்தைப் புரிந்ததாக கூறப்படுகிறது.

SHARE