உலக கிரிக்கெட் நின்று போய் விடுமா? மொகமது யூசுப் விளாசல்

275

இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் நடைபெறாவிட்டால், உலக கிரிக்கெட் நின்று போய் விடுமா என முன்னாள் வீரர் மொகமது யூசுப் தெரிவித்துள்ளார்.

இந்தியா- பாகிஸ்தான் தொடர் நடைபெறுவது குறித்து நிரந்தரமான முடிவு இன்னும் எட்டப்படாமல் உள்ளது.

இந்த போட்டி தொடர் குறித்து பல வீரர்களும் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் மொகமது யூசுப் கூறுகையில், இந்தியா- பாகிஸ்தான் தொடர் ஏதோ உலக கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் இருநாடுகளுக்கும் நல்லது என்றும் பேசப்பட்டு வருவது எனக்கு அர்த்தமுள்ள பேச்சாகப்படவில்லை.

ஏன் இந்த விவகாரம் இவ்வளவு பரபரப்பாக பேசப்படுகிறது என்று தெரியவில்லை.

இந்த தொடர் நடக்காவிட்டால் இருநாட்டு கிரிக்கெட் மற்றும் உலக கிரிக்கெட்டை பாதிக்காது.

எப்போதுமே இரு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்களின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் நிறைய இடைவெளிகள் இருந்தே வந்துள்ளது, இதனால் இருநாட்டு கிரிக்கெட் வளர்ச்சிக்கும் எந்த வித பாதிப்புகளும் ஏற்பட்டதில்லை.

நாம் ஒருவரையொருவர் எதிர்த்து விளையாடவில்லை என்பதால் உலக கிரிக்கெட் நின்று போய் விடுமா என்ன?

நாம் நன்றாக தானே இருக்கிறோம், உலக கிரிக்கெட்டின் நலனுக்காக என்று பேசுவதை நிறுத்த வேண்டும், இந்த அக்கறையை உள்ளூர் கிரிக்கெட் காண்பித்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

SHARE