உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு ஐந்து லட்சம் வீடமைப்பு திட்டம்! சஜித் பிரேமதாச அறிவிப்பு

629

எதிர்வரும் அக்டோபர் 05ம்திகதி அனுட்டிக்கப்படவுள்ள உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களுக்காக ஐந்து லட்சம் வீடமைப்புத் திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச மேற்கொண்டுள்ளார்.

இதன் முதற்கட்டமாக வீடொன்றுக்கு தலா ஒரு லட்சம் வீதம் ஐம்பதினாயிரம் வீடுகள் நிர்மாணிப்பதற்கான நிதியுதவி வழங்கும் செயற்திட்டம் தற்போது முன்னெடுக்கப்படுகின்றது.

அத்துடன் எதிர்வரும் நாட்களில் பிரதேச செயலகங்கள் தோறும் வீடமைப்பு தொடர்பான குறைபாடுகளை களையும் நோக்கில் நடமாடும் சேவைகளை நடத்தவும் வீடமைப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக நகர்ப்புறங்களில் வசிக்கும் குறைந்த வருமானமுடைய மக்களின் நலன் கருதி ஐந்து லட்சம் வீடமைப்புத் திட்டமொன்றை முன்னெடுக்கவும் அமைச்சர் சஜித் பிரேமதாச தீர்மானித்துள்ளார்.

SHARE