உலக தமிழர் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாணவர் எழுச்சி நாள் திருகோணமலையில் அனுஸ்டிப்பு

192

தமிழீழ மாணவர் எழுச்சி நாள் ஜீன் 06 திகதி திருகோணமலை பாலையூற்றில் அமைந்துள்ள திருமலை வதிவிடத்தில் உலக தமிழர் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஈழ வரலாற்றின்  முதற்தற்கொடையாளர் தியாகி பொன்னுத்துரை சிவகுமார் அவர்களின் 44 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

இதன் போது கிழக்கு மாகாண  வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் பல்பலைக்கழக மாணவர்கள் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் சமூக நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்நினைவேந்தல் நிகழ்வின் போது பொன்.சிவகுமாரனின் திருவுருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்ததுடன் அனைவராலும் அகவணக்கம் செலுத்தி மௌன இறைவணக்கம் செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

  

  

  

     

SHARE