மூன்று தசாப்த காலங்களாக இடம்பெற்ற விடுதலைப்புலிகளின் போராட்ட வரலாறு கடல், வான், தரை என வளர்ச்சிகண்டு, விடுதலைப்புலிகள் சர்வதேச நாடுகளுக்கு சவாலாக விளங்கினர். இலங்கையில் பலாலி இராணுவ முகாம், கட்டுநாயக்க விமான நிலையம், கொலன்னாவ, அநுராதபுர விமான நிலையம், வருமானவரித் திணைக்களம் போன்ற இடங்களில் தாக்குதல்களை நடாத்தி விடுதலைப்புலிகளின் அமைப்புக்கு பலம் சேர்த்துக்கொடுத்தவர் பிரபாகரன்.
வான்படைக்குப் பொறுப்பாக கேணல் சங்கர் அவர்கள் தலைமை வகித்தார். இதனைக்கண்டு வியப்படைந்த சர்வதேசம் விடுதலைப்புலிகளை அழித்தொழிக்க வேண்டும் எனத் தீர்மானித்தது. ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் 07சுப்பர் சொனிக் விமானங்களை விடுதலைப்புலிகள் வைத்திருந்தனர். அவை இன்றுவரை கண்டறியப்படவில்லை. இலங்கையின் 16 சிங்கள ஆட்சியாளர்களையும் திண்டாட வைத்தவர் பிரபாகரன். விடுதலைப்புலிகளது வான்படை வளர்ச்சியினது காணொளியினை கீழே பார்க்கலாம்.