உலக வர்த்தக மையத்தின் மீது ஏசுநாதரின் உருவம் தோன்றியதா?

237

 

அமெரிக்காவில் உள்ள உலக வர்த்தக மைய கோபுரத்தின் மீது ஏசுநாதாரின் உருவம் தோன்றியதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நியூயோர்க் நகரில் உள்ள உலக வர்த்தக மையத்தின் மீது அல்-கொய்தா தாக்குதல் நடத்தியதில் 2,996 பேர் கொல்லப்பட்டனர்.

கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் திகதி நடத்தப்பட்ட இந்த தாக்குதலின் 15-வது ஆண்டு நினைவு அஞ்சலி கடந்த 11ம் திகதி அனுசரிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி ஒபாமா, ஜனநாயக கட்சி வேட்பாளார் ஹிலாரி கிளிண்டன், குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

உலக வர்த்தக மையத்திற்கு அருகில் பிரகாசமான மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருந்ததை தொடர்ந்து அதன் ஒளிக்கற்றைகள் வானில் பாயும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

 

இந்நிலையில், உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வை Rich McCormack என்ற புகைப்படக்காரர் தனது கமெராவில் பதிவு செய்துள்ளார்.

அப்போது, கீழே இருந்து சென்ற ஒளியின் உச்சத்தில் வெள்ளையாக ஒரு உருவம் தெரிந்துள்ளது.

இந்த உருவம் ஏசுநாதரின் உருவம் போன்றும், உயிரிழந்தவர்களை அவர் ஆசிர்வதிப்பதும் போன்றும் காட்சி அமைந்துள்ளது.

இது குறித்து புகைப்படக்காரர் பேசியபோது, ‘நிகழ்ச்சியில் நான் பல புகைப்படங்களை எடுத்தேன். ஆனால், ஒரே ஒரு புகைப்படத்தில் மட்டுமே ஏசுநாதர் இருப்பது போன்று காட்சி பதிவாகியுள்ளது’ என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

இப்புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டதும் ’கடவுள் மீது இருக்கும் நம்பிக்கை இதனை பார்த்த பிறகு மேலும் அதிகரிக்கிறது’ என பலர் வியப்பாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

SHARE