புத்தளம் பகுதியில் உள்நாட்டு துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன், 35 வயதுடைய நூர்தீன் பஸீர் மொஹமட் இஷ்மத் எனும் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் – நூர்நகர் பகுதியில், பொலிசாருக்கு நேற்று கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின்போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய குறித்த நபரிடமிருந்து அனுமதிப்பத்திரமற்ற உள்நாட்டு துப்பாக்கி ஒன்றும் , 6 தோட்டாக்களும், 5 வெற்றுத் தோட்டாக்களும் மற்றும் 380 மில்லி கிராம் தொகை கஞ்சாவும் மீட்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.