உள்ளடக்க மதிப்பீட்டை மேம்படுத்துமாறு டுவிட்டரை எச்சரிக்கும் ஐரோப்பிய யூனியன்

147

 

ஐரோப்பிய யூனியன் வரும் ஆகஸ்ட் 25 ஆம் திகதி முதல் டிஜிட்டல் சேவைகள் சட்டத்தை ஐரோப்பாவில் நடைமுறைக்கு கொண்டு வர உள்ளது.

இதன் மூலமாக , சமூக வலைதளங்களில் வெறுப்பு பேச்சு, தவறான தகவல்களை பகிருதல் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் விஷயங்களை கட்டுப்படுத்துவது போன்ற திட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளன.

இப்புதிய சட்டவிதிக்கமைய, முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டர் தயாராக உள்ளதா என்பதை சரிபார்க்க ஐரோப்பிய யூனியன் ஆணையர் தியரி பிரெட்டன் டுவிட்டர் தலைமையகத்தில் அதன் சிஇஒ லிண்டா யாக்காரினோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதுதொடர்பில் தியரி பிரெட்டன்,

“பயனர் பாதுகாப்பு சார்ந்த விதிகளுக்கு இணங்க டுவிட்டர் இயங்க வேண்டும்.

குறிப்பாக தவறான தகவல் பரப்புதல் மற்றும் குழந்தைகள் துஷ்பிரயோகம் சார்ந்த உள்ளடக்கங்களை அனுமதிக்க கூடாது.அதை தடுப்பதற்கான தொழில்நுட்பம் டுவிட்டரில் இருக்க வேண்டும்.

அப்படி இல்லை என்றால் அதை ஈடு செய்யும் வகையிலான ரிசோர்ஸ் இருக்க வேண்டும்.

இந்த விதி அமலுக்கு வரும் போது அதற்கு இணங்க டுவிட்டர் தளம் சில மாற்றங்கள் செய்ய வேண்டி உள்ளது” போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

SHARE