உள்ளுராட்சிமன்றத் தேர்தலும் தமிழ்க் கட்சிகளின் நிலைப்பாடும்

109

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றங்களுக்கானத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக் கட்சிகளான ரெலோ மற்றும் புளொட் ஏனைய தமிழ்க் கட்சிகள் கூட்டணியொன்றை அமைக்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இரு நாட்கள் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோ, சித்தார்த்தன் தலைமையிலான புளொட், சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ், என்.சிறிகாந்தா தலைமையிலான தமிழ் தேசிய கட்சி என்பன புதிய கூட்டணியாக உள்ளுராட்சி தேர்தலை எதிர்கொள்ளும் நிலைப்பாட்டில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வழமைபோன்றே இம்முறையும் தனித்தே போட்டியிடவுள்ளது.

 

SHARE