
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதத்தில் நடத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
எதிர்வரும் 2016ம் ஆண்டு மார்ச் மாதம் நிச்சயமாக உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற தேசிய முகாமைத்துவ பேரவை கருத்தரங்கில் பங்கேற்ற போது இதனைத் தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை ஒத்தி வைப்பதற்கு எவ்வித அவசியமும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நிச்சயமாக அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.