உள்ளூராட்சி மன்றங்களின் மக்கள் நலன்சார் செயற்திட்டங்கள்! வவுனியா கூட்டத்தில் தீர்மானம்

200
 வவுனியா மாவட்டத்தின் நான்கு பிரதேச சபைகள் மற்றும் நகர சபைகளால் முன்னெடுக்கப்படும் மக்கள் நலன்சார் செயற்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடலொன்று வவுனியா பிராந்திய உள்ளூராட்சி ஆணையாளர் பணிமனையில் நேற்று இடம்பெற்றது.

இதில், மக்கள் நலன்சார் திட்டங்களை திட்டமிடும்போது மாவட்டத்தின் நீண்டகால நோக்கை அடிப்படையாக கொண்டதாக அமைய வேண்டும் எனவும் இதன்போது உள்ளூராட்சி மன்றங்களினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற செயற்திட்டங்கள், எதிர்காலத்தில் திட்டமிடப்பட்ட செயற்திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன் இவ்வாறான கூட்டங்கள் எதிர்காலத்தில் மாதமொருமுறை நடாத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், ம.தியாகராசா, எம்.பி.நடராசா, ஜயதிலக, தர்மபால செனவிரத்ன, பிராந்திய உள்ளூராட்சி ஆணையாளர், நகரசபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வெங்கல செட்டிகுள பிரதேச சபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபைகளின் செயலாளர்கள், தொழிநுட்ப உத்தியோகத்தர்கள், சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முன்னைநாள் பிரதேச சபைகளின் தலைவர்கள், துணைத்தலைவர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

SHARE