உள்ளூராட்சி மன்றங்களில் மோசடியா?: விசாரணை செய்ய விசேட பிரிவு

295
உள்ளூராட்சி மன்றங்களில் இடம்பெற்று வருவதாக கூறப்படும் பாரிய மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட இணைப்பு பிரிவொன்றை ஸ்தாபிக்க உள்ளூராட்சிமன்ற அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகின்றது.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சின் ஊடாக இந்த பிரிவு ஸ்தாபிக்கப்படவுள்ளதாக அமைச்சின் ஊடக செயலாளர் தெரிவித்தார்.

குறித்த பிரிவு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் இன்று பிற்பகல் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

இதன்படி, உள்ளூராட்சி மன்றங்களில் இ்டம்பெறுகின்ற பாரிய ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் இந்த பிரிவில் முறைப்பாட்டை செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான முறைப்பாடுகளை பொலிஸார், லஞ்ச மற்றும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான ஆணைக்குழு ஆகியன இணைந்து விசாரணைகளை நடாத்தவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

SHARE