உள்ளுராட்சி மன்றத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விகிதாசார முறைமை அல்லது தொகுதிவாரி முறை ஆகிய ஏதாவது ஓர் முறையில் தேர்தலை நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள பிரதமர் காரியாலயத்தில் நேற்று பிரதமரை சந்தித்த போது இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தப்படும் முறைமை பற்றி ஐக்கிய தேசியக் கட்சிக்கு பிரச்சினை கிடையாது என தெரிவித்துள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தில் உள்ளூராட்சி மன்றங்கள் மாநகரசபைகள் மற்றும் நகரசபைகளுக்கான தேர்தலை நடாத்துவதனால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சாதகமான நிலைமை ஏற்படும் என பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் தெரிவித்துள்ளனர்.