உள்ளூர் டெஸ்டில் மிரட்டலாக சதம் விளாசிய இலங்கை வீரர்

103

 

மேஜர் கிளப் லீக் தொடரில் சிங்களீஷ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்காக அவிஷ்கா பெர்னாண்டோ சதம் விளாசினார்.

மேஜர் கிளப் லீக்
பொலிஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் சிங்களீஷ் ஸ்போர்ட்ஸ் கிளப் கொழும்பில் நடந்து வருகிறது. இதில் பொலிஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி நாணய சுழற்சியில் வென்று பந்துவீச்சை தெரிவு செய்தது.

அதன்படி களமிறங்கிய சிங்களீஷ் அணியில் ஷெவோன் டேனியல் 56 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து அவிஷ்கா பெர்னாண்டோ மற்றும் கேப்டன் நிபுன் தனஞ்செய கூட்டணி அமைத்தனர்.

அவிஷ்கா சதம்
இவர்களது பார்ட்னர்ஷிப் மூலம் அணி 200 ஓட்டங்களை கடந்தது. அவிஷ்கா சதம் விளாசிய பின்னர் 107 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 3 சிக்ஸர், 9 பவுண்டரிகள் அடங்கும்.

அதன் பின்னர் குஷால் மெண்டிஸ் களமிறங்கி நிதமான ஆட்டத்தை வெளிப்படுத்த, நிபுன் 40 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

SHARE