கிளிநொச்சி மாவட்ட மிகவும் பின்தங்கிய உழவனூர் கிராமத்துக்கு 21-01-2016 மாலை 7:30 மணியளவில் நேரடி விஜயம் மேற்கொண்ட வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள், அங்கு வாழும் மக்களோடு நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டு அவர்களது குறை நிறைகளை முழுமையாக விசாரித்து அறிந்துகொண்டதோடு, இந்த ஆண்டு கிராம அபிவிருத்தி திணைக்களம் மூலம் அவர்களது மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்துக்கு சில திருத்த வேலைகளுக்கு ரூபாய் 3 இலட்சமும், உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் உணவு பதனிடும் நிலையத்துக்கு ரூபாய் 5 இலட்சமும் நிதி ஒதுக்கித் தருவதாகவும் இதனை சரியான முறையில் பயன்படுத்தி அங்குள்ள வறிய குடும்பங்கள், பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்கள் ஆகியவர்களுக்கு பயனுள்ள வகையில் நாளாந்தம் ஓர் நிலையான வருமானத்தை பெற்றுக்கொள்ளும் வகையில் சிறப்பாக நடைமுறைப்படுத்தவேண்டும் என்றும், எதிர்வரும் காலத்தில் தம்மால் இயன்ற அனைத்து உதவிகளையும் இந்த கிராமத்துக்கு வழங்குவதாகவும் அங்கு தெரிவித்தார்.