உழைப்பிற்கேற்ப ஊழியம் வழங்கக்கோரி நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட மறே தோட்டத்தில் பாரிய ஆர்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது மறோ தோட்ட தேயிலை தொழிற்சாலை வாளாகத்தில் பதாதைகள் ஏந்தியவாறு 01.10.2018 காலை 8 மணிமுதல் 10 மணிவரை இவ் ஆர்பாட்டம் இடம்பெற்றது





கூட்டொப்பந்தத்தை இரத்துச்செய்யகோரிய ஆர்பாட்டகாரர்கள் கூட்டொப்பந்த அடிப்படையில் 730 ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதாக கூறப்படுகின்ற போதிலும்நிபந்தனை அடிப்டையிலே வழங்கப்படுகின்றது நாளொன்றுக்கு 18 கிலோ கிராம் கொழுந்தெடுக்க வேண்டும் என்பதுடன் 20 நாட்களுக்கு குறையாமல் வேலை செய்ய வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது இவ்வாறு இல்லாதவிடத்து 530 ரூபா சம்பளமே எமக்கு கிடைக்கின்றது எனவும் இனியும் எம்மால் இந்த கூட்டொப்பந்த முறையைஏற்க முடியாது நாளொன்று ஆயிரம் ரூபாய் நிபந்தனையற்ற முறையில் சம்பளம் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்






முதலாளிமார்சம்மேனத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மேற்படி ஆர்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வரையில் கலந்துகொண்டதுடன் மறே தோட்ட முகாமையாளரிடன் உழைப்பிற்கேற்ற ஊதியம் வழங்கக்கோரி முதலாளிமார் சம்மேளத்திற்கு வழங்கவென ஆர்பாட்டகாரர்களினால் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டு இரண்டு மணித்தியளங்களின் பின்னர் வேலைக்கு சென்றனர் .