நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை அணி வீரர் குஷல் ஜனித் பெரேரா, மீண்டும் நாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தைப் பாவித்தமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பரிசோதனை முடிவுகளுக்கு அமைய சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் விதிமுறைகளின்படி குஷல் ஜனித்தை மீண்டும் நாட்டுக்கு அழைத்து மற்றுமொரு பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை அணியில் குஷலுக்கு பதிலான கௌஷால் சில்வா இணைந்து கொள்ளவுள்ளார்.
![]() |