பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சுக்காக சொந்தமான கட்டடமொன்றினை நிர்மாணிப்பதற்கென 31.5 மில்லியன் ரூபாவுக்கு காணியை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதுவரையில் 630,000 ரூபா மாதாந்த வாடகை கொடுப்பனவுடன் பத்தரமுல்லை பெலவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் இயங்கி வரும் பாராளுமன்ற விவகார அமைச்சினை அரசுக்கு சொந்தமான கட்டிடம் ஒன்றில் முன்னெடுத்து செல்வதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது.
இதற்கமைய நகர அபிவிருத்தி அதிகார சபையின் மூலம் பத்தரமுல்லை புதிய பாராளுமன்ற வீதியில் அமைந்துள்ள 40 பேர்ச்சஸ் இடத்தை 31.5 மில்லியன் ரூபாவுக்கு விலைக்கு வாங்குவதற்கு பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவை நிறைவேற்று குழுவின் சிபாரிசின் பெயரில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.