ஊடகவியலார் நிமல்ராஜன் அவர்கள் படுகொலை செய்யப்பட்டு 18 ஆண்டுகள் கடந்து விட்டது . இலங்கை ராணுவத்தின் துணைக்குழுக்களாக இயங்கும் டக்ளஸ் தலைமையிலான EPDP ஆயுத கும்பல் செய்த கொடூரங்களில் இதுவும் ஒன்று

201

 

ஊடகவியலார் நிமல்ராஜன் அவர்கள் படுகொலை செய்யப்பட்டு 18 ஆண்டுகள் கடந்து விட்டது . இலங்கை ராணுவத்தின் துணைக்குழுக்களாக இயங்கும் டக்ளஸ் தலைமையிலான EPDP ஆயுத கும்பல் செய்த கொடூரங்களில் இதுவும் ஒன்று .

சர்வதேச மனித உரிமைகள் உட்பட எல்லா தரப்பும் தெளிவாக குற்றவாளிகளை அடையாளம் காட்டியும் இன்றுவரை எந்த நடவைடிக்கையும் எடுக்க பட வில்லை .கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி உட்பட சான்றுகள் டக்ளஸ் துணை ஆயுத குழு அலுவலகத்தில் கண்டு பிடிக்கப்பட்டன .EPDP க்கு சொந்தமான சைக்கிள் கைரேகைகள் கூட நிமல்ராஜன் வீட்டிற்கு அருகில் கண்டு பிடிக்கப்பட்டன . இலங்கை ராணுவமும் சந்திரிக்கா அரசும் பிரதான குற்றவாளியான நெப்போலியன் உட்பட்ட குற்றாவளிகளை நாட்டை விட்டு தப்ப வைத்தது.சட்டமா அதிபர் திணைக்களம் இந்த வழக்கை வருடக்கணக்காக கிடப்பில் வைத்து இருக்கிறது . இந்த கொலையின் சூத்திரதாரியான டக்ளஸ் இன்றும் இலங்கை அரசின் ஜனநாயக அரசியல்வாதியாக இருக்கிறார் .இதே போல செய்தியாளர் செல்வராசா ரஜிவர்மன் சாளரம் மாணவர் இதழின் ஆசிரியர் சகாதேவன் நிலக்ஷன் மற்றும் சக்தி தொலைக்காட்சி,வானொலி ஊடகவியலாளரான பரநிருபசிங்கம் தேவகுமார் என பல ஊடகத்துறை சார்ந்தவர்களை டக்ளஸ் பலி எடுத்து இருந்தார். EPDP இல் இருந்து தப்பி போக முயன்ற சின்னபாலா என்ற பாலநடராஜ ஐயர் என்கிற ஊடகவியாளரை கூட டக்ளஸ் கும்பல் வேட்டையாடி இருந்தது
இதே போல ஊடகவியலார் அற்புதனை கொலை செய்த சந்திரகுமார் இந்தியா புலனாய்வு துறை பிண்ணனியில் இருந்து கொண்டு ஜனநாயக வகுப்பு எடுத்து கொண்டு இருக்கிறார் . மறுபுறம் ஊடகவியலார் சிவராமை கொலை செய்த புளொட் கும்பல் , ஊடகவியலார் நடேசனை கொலை பிள்ளையான் கும்பல் எல்லோரும் இலங்கை அரசின் தயவில் அரசியல் செய்யும் எங்கள் பிரதிநிதிகளாக இன்னும் இருக்கிறார்கள் . இந்திய அமைதிப்படை பிரசன்னமாகியிருந்த காலப்பகுதியில் அப்போது வெளிவந்து கொண்டிருந்த முரசொலி நாளிதழின் ஆசிரியரான எஸ்.திருச்செல்வம் மீது படுகொலை முயற்சியொன்று இடம்பெற்றிருந்தது. எனினும் அம்முயற்சியினில் அவர் தப்பித்துக்கொள்ள 19 வயதுடைய பாடசாலை மாணவனான அவரது மகன் அகிலன் பத்மநாபா தலைமையிலான EPRLF கும்பலால் பலி எடுக்கப்பட்டான் . இப்போது இந்த கும்பல் வரதராஜபெருமாள் தலைமையில் வடக்கில் இந்தியா புலனாய்வு துறை ஏற்பாட்டில் ஊடுருவி இலக்கியம் என்றும் , மனித உரிமைகள் என்றும் கதை சொல்லி வருகிறது

இதில் ஒருவர் கூட தண்டிக்கப்பட வில்லை. நல்லாட்சி அரசில் கூட எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை ..ஆட்சியில் பங்கு பெரும் எங்கள் மக்கள் பிரதிநிதிகள் கூட ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் தந்து டக்ளஸ் உட்பட குற்றவாளிகளை தண்டிக்க முன் வரவில்லை

SHARE