ஊடகவியலாளர்களை பயிற்றுவிக்கும் நிறுவனமொன்று ஆரம்பிக்கப்படும் – கயந்த கருணாதிலக்க

290
ஊடகவயிலாளர்களை பயிற்றுவிக்கும் நிறுவனமொன்று ஆரம்பிக்கப்படும் என ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். ஊடக அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சீன அரசாங்கத்துடன் இணைந்து இந்த ஊடகப் பயிற்சி நிறுவனம் ஆரம்பி;க்கப்பட உள்ளது. சீனாவிற்கு விஜயம் செய்திருந்த போது இந்த நிறுவனத்தை அமைப்பதற்கான உதவிகளை வழங்க இணக்கம் காணப்பட்டது.

இந்த விடயம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரிடம் அறிவிக்கப்பட்டது.
ஊடகவியலாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனமொன்றை ஆரம்பித்து பயிற்சி வழங்குவது மிகவும் அவசியமானது.

பயிற்சி நிறுவனம் அமைப்பது குறித்து அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படும் என அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

gayantha

SHARE