காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் கலந்துரையாடல் மண்டபத்தினுள் ஊடகவியலாளர்களாக தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு இரண்டு புலனாய்வாளர்கள் கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர்.
யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. அச் சந்திப்பு இடம்பெற்ற மண்டபத்தினுள் இரு புலனாய்வாளர்கள் உள்நுழைந்திருந்தனர்.
அவர்கள் இருவரும் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தவர்களை மறைமுகமாக புகைப்படங்களை எடுத்துக்கொண்டதுடன், கலந்துரையாடல் முழுவதனையும் ஒளிப்பதிவும் செய்து கொண்டனர். அவ்விருவரும் அங்கிருந்த வரவு பதிவேட்டில் தம்மை ஊடாகவியலாளர்கள் என்றே பதிவு செய்துள்ளனர். அதேவேளை மண்டபத்தின் வெளியில் பல புலனாய்வாளர்களின் நடமாட்டம் காணப்பட்டது.