ஊடகவியலாளர் வெளியேற்றல் சம்பவம் தவறுதலாக நடைபெற்றது, அதற்காக மனம் வருந்துகிறேன்- கிறிஸ்தவ பாதிரியார்

175
வவுனியா புனித அந்தோனியார் ஆலயத்தின் சிறுவர் பாடசாலையின் வருடாந்த நிகழ்வில் ஊடகவியலாளரை செய்தி சேகரிக்க தடை விதித்த சம்பவம் தவறுதலாக நடைபெற்றுள்ளது. அச்சம்பவத்துக்காக மனம் வருந்துவதாக தேவாலயத்தின் கிறிஸ்தவ பாரிதியார் தெரிவித்துள்ளார்.
வருடா வருடம் நடைபெறும் இறம்பைக்குளம் புனித அந்தோனியார் சிறுவர் பாடசாலையின் விழையாட்டு நிகழ்வுகள் பெற்றாரின் ஒத்துழைப்புடன் இடம்பெற்று வருகின்ற நிலையில், சிறுவர்களின் நிகழ்வுகள் பெற்றார்கள் புகைப்படம் எடுப்பதற்கு நிர்வாகத்தினால் தடைசெய்யப்பட்டிருந்தது. சிறுவர்களின் விழையாட்டு நிகழ்வுகளை புகைப்படம் எடுப்பதற்காக பிரத்தியோக படப்பிடிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில் நிகழ்வுகள் நடைபெற்ற வேளை ஊடகவியலாளர் என தெரியாமல் சிறுவர்களின் பெற்றார் ஒருவரே பகைப்படம் எடுக்கிறார் என்ற தவறுதலான புரிந்துணர்வின் காரணமாகவே ஊடகவியலாளர் வெளியேற்றப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது, என குறித்த கிறிஸ்தவ பாதிரியார் கவலை வெளியிட்டார்.
அத்துடன் முன்கூட்டியே குறித்த ஊடகவியலாளர் அனுமதி பெறாமையே இக்குழப்பத்திற்கு காரணமாக அமைந்தது என தெரிவித்த பாதிரியார் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளரை தொடர்பு கொண்டு நடைபெற்ற சம்பவம் தொடர்பாக மனம் வருந்துவதாக தெரிவித்துள்ளதுடன் நிகழ்வுகள் புகைப்படம் எடுப்பதற்கு முன்கூட்டியே அனுமதியை ஆலயத்தின் நிர்வாகத்திடம் பெற்றுக்கொள்ளுமாறு தயவாய் கேட்டுக்கொண்டார்.
SHARE