வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளரால் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பெயரைக் குறிப்பிட்டு வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை குறித்து இன்று பிரதமருடன் விஷேடகலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
இன்று பிரதமர் அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் அமைச்சர் கயந்த கருணாதிலக்க, பிரதி அமைச்சர் கரு பரணவிதாரன மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் நிமல் போபகே ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளரால் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் தொடர்பில் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்று அண்மையில் ஊடகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, குறித்த அறிக்கை செயலாளரின் கோரிக்கையே தவிர அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்ல என, வெகுஜன ஊடகத்துறை மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க அறிவித்திருந்தார்.
அத்துடன் பிரதமரும் இந்த விடயம் தொடர்பில் கூட்டு எதிர்கட்சியை கட்டுப்படுத்துவதற்கு தமக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என அறிக்கைவெளியிட்டிருந்தார்.
இந்த நிலையிலையே இது தொடர்பான அறிக்கையினை ஊடக செயலாளர் இன்றைய தினம்அலரிமாளிகையில் சமர்ப்பிக்க வேண்டும் என பிரதமர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கமையவே இன்றைய தினம் குறித்த விசாரணைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.