ஊடக அமைச்சின் செயலாளரை பணி நீக்க அரசாங்கம் தீர்மானம்.

286
ஊடக அமைச்சின் செயலாளரை பணி நீக்க அரசாங்கம் தீர்மானம்: குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-

ஊடக அமைச்சின் செயலாளர் நிமால் போபகேவை பணி நீக்கம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கூட்டு எதிர்க்கட்சி தொடர்பில் அண்மையில் வெளியிட்ட ஊடக அறிக்கை காரணமாகவே நாட்டில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்திருந்தன.

ஊடக சுதந்திரத்தை உறுதி செய்வதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஊடக அமைச்சின் செயலாளரது நடவடிக்கைகள் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் ஊடக அமைச்சின் செயலாளர் பதவியிலிருந்து விரைவில் நிமால் போபகே நீக்கப்பட உள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியினர் என்ற பெயரை ஊடகங்கள் பயன்படுத்தக் கூடாது என்ற வகையில் அண்மையில் நிமால் போபகே ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அண்மையில் ஊடக அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்ட போபககே வெளியிட்ட முதலாவது ஊடக அறிக்கையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE