ஊட்டியில் மட்டும் அல்ல..! அனைத்து ஆறுகளின் குறுக்கேயும் தடுப்பணைகள் கட்ட வேண்டும்..! வலுக்கிறது கேரிக்கை..!

257

தமிழ்நாட்டை பொறுத்தவரை நாளுக்கு நாள் தண்ணீர் தேவை அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்ப நீர்வளம் இல்லை. இருக்கும் ஆறுகள், அணைகள் போன்ற நீர் நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. தமிழகத்தின் மிகப்பெரிய அணையான மேட்டூர் அணையில் 24 அடிக்கும் குறைவான நீரே உள்ளது. ஒரு குட்டை போல காட்சி அளிக்கிறது.

இதே நிலை தொடர்ந்தால் வரும் காலத்தில் தமிழகம் பாலைவமான மாற வாய்ப்பு உள்ளது. எனவே இந்த நிலையை மாற்றி நமது வருங்கால சந்ததியினரை காப்பாற்ற நீர்வளத்தை பெருக்குவது அவசியம்.

இதற்காக இருக்கும் வளங்களை நாம் வளமோடு பயன்படுத்தி கொள்ள வேண்டும். தமிழக மேற்கு தொடற்சி மலையில் பல தடுப்பனை கட்ட முன்வர வேண்டும் காட்டிற்குள் போலி சாமியார் வேலி போட்டு பல கல்லூரி முதல் அடம்பர சொகுசு பங்காக்கள் கட்டி வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் வாழ அரசியல்வாதிகள் மக்கள் நலன் என்று பொய் சொல்லி அரசியல் செய்து வருகின்றனர்.

மேலும் ஊட்டியில் மோயர் ஆற்றின் குறுக்கே அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஊட்டியில் மட்டும் அல்ல அனைத்து ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகளை கட்ட வேண்டும். இதற்காக போராட்டம் நடத்த வேண்டும். பெரிய அணைகளில் இருந்து விவசாய நிலங்கள் உள்ள பகுதிகளில் இருக்கும் சிறிய ஏரிகளுக்கு நீர் போக கால்வாய்களை வெட்ட வேண்டும். செயற்கை கோள் உதவியுடன் நீர் நிலைகளை கண்டறிந்து ஏரிகளும் அணைகளையும் கட்ட வேண்டும்.

மேலும் மழைநீர் சேமிப்பை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். தற்போது சீமை கருவேல மரத்திற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட்டது போல மழைநீர் சேமிப்புக்கும் ஏற்பட வேண்டும். ஏரி, குளம் போன்ற நில ஆக்கிரமிப்பாளர்களை தடுக்க வேண்டும். இதற்காக கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு இளைஞர்களிடையே பெரும் கிளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

அரசியல்வாதிகளை நம்பாமல் ஏரி, குளங்களை தமாகவே முன்வந்து தூர்வாரி உள்ளனர். அந்த பகுதிகளில் இப்போது நீர்வளம், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. மேலும் பல இடங்களில் இளைஞர்கள் ஏரி, குளங்களை சீரமைத்து மழை நீரை சேமிக்க வழிவகை செய்ய திட்டமிட்டு உள்ளனர். வாய்ப்பு உள்ள இடங்களில் ஏரி, குளங்களை வெட்ட அதிகாரிகள், அரசியல்வாதிகளிடம் கோரிக்கை வைக்க வேண்டும். அப்படி செய்தால் நமது தமிழகம் வளமான நாடாக மாறும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

SHARE